விவசாயக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: ஏஎஸ்ஆர்பி - நெட் தேர்வு அறிவிப்பு

விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள 582 பணியிடங்களுக்கான வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள 582 பணியிடங்களுக்கான வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம்(ஏஎஸ்ஆர்பி) நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் இளைஞர்களிடம் இருந்து வரும் மே 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Subject Matter Specialist

காலியிடங்கள்: 41

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயது வரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Technical Officer

காலியிடங்கள்: 83

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயது வரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Agricultural Research Scientist (ARS)

காலியிடங்கள்: 458

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

வயது வரம்பு: 1.8.2025 தேதியின்படி 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். ASRB -NET தேர்வு எழுதி கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேர விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

தகுதி: வேளாண் உயிரி தொழில்நுட்பம், வேளாண் பூச்சியியல், வேளாண் நுண்ணுயிரியல், தாவர உயிரி வேதியியல், மலர் வளர்ப்பு, பழ அறிவியல், விலங்கு உயிர் வேதியியல், விலங்கு ஊட்டச்சத்து, விலங்கு உடலியல், பால் வேதியியல், 'பால் நுண்ணுயிரியல், பால் தொழில்நுட்பம், கால்நடை தயாரிப்பு தொழில்நுட்பம், கால்நடை உற்பத்தி மேலாண்மை, கோழி அறிவியல், கால்நடை மருத்துவம், கால்நடை நுண்ணுயிரியல், கால்நடை மருந்தியல், மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், வேளாண் காடுகள், வேளாண்மை, மண் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண் பொருளாதாரம், மனையியல் அறிவியல் ஆகிய ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தால்(ஏஎஸ்ஆர்பி) நடத்தப்படும் நெட் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். ஏஎஸ்ஆர்பி நெட் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 2.9.2025, 4.9.2025

எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ. 1,000. ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். இதர பிரிவினர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in என்ற இணையதளம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.5.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com