
தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (என்எஸ்எப்டிசி) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NSFDC/HR/Rectt./151/2025
பணி: Assistant General Manager
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
தகுதி : கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக தகுதியுடன் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபுள்யுஏ, எல்எல்பி முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு : 42-க்குள் இருக்கவேண்டும். இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியுடன்.
பணி: Assistant Manager
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி : பி,காம் , எம்.காம் தேர்ச்சி மற்றும் சிஏ, ஐசிடபுள்யுஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Junior Executive
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.26,000 - 93,000
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்துடன் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவமும், ஹிந்தியில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Junior Executive (Finance)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 26,000 - 93,000
தகுதி : வணிகவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பணி எண் 1-க்கு ரூ.600, பணி எண் 2 மற்றும் 3-க்கு ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nsfdc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.4.2025