
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலும் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் திட்ட மேலாண்மை, ஆலோசனை, கல்வி தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கி வருவதுடன் தொடர்ந்து லாபம் ஈட்டும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொதுத்துறை நிறுவனமான இடிசிஐஎல்(இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 103 தொழில் மற்றும் மனநல ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்களை www.edcilindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 ஆம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.