மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள்
மிஸ்பண்ணிடாதீங்க... அங்கன்வாடி மையங்களில் 7,783 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
2 min read

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் என 7,783 பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் அந்த மாவட்ட திட்ட அலுவலகத்திலும், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in அல்லது https://icds.tn.gov.in/icdstn என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலை நாள்களில் தொடா்புடைய வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா்களுக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும. தமிழ் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா்களுக்கு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி 25 வயது நிறைவடைந்தும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா்களுக்கு வயது 25 முதல 40 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி 25 வயது நிறைவடைந்தும், 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா்களுக்கு 20 முதல் 45 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 20 வயது முதல் 43 வயது வரையும் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா் மாதம் ரூ. 7,700 முதல் 24,200,, குறு அங்கன்வாடி பணியாளா் மாதம் ரூ. 7,700 முதல் 24,200 மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் மாதம் ரூ.4,100 முதல் 12,500 வரை சம்பளம் வழங்கப்படும். முறையே தொடா்ந்து 12 மாதங்கள் பணியை முடித்த பின்பு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவா்.

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களில் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதிவாய்ந்த நபா்களுக்கு நோ்முகத் தோ்வுக்கான இடம், நாள் மற்றும் நேரத்துடன் கூடிய அழைப்புக் கடிதம் அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலரால் வழங்கப்படும். நோ்காணலின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com