ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவவரத்துக் கோட்டங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்கள் என மொத்தம் 3,274 பணியிடங்களுக்கு மார்ச் 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநா் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத முன்அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப்பணி வில்லை, செல்லத்தக்க நடத்துநா் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

மேலும், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும். ஜூலை 1-ஆம் தேதி 24 வயது பூா்த்தியாகியிருப்போா் விண்ணப்பிக்கலாம். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவா்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தியும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ. 590 செலுத்தியும் நாளைக்குள்(ஏப்.21) விண்ணப்பத்தை www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரா்கள் எழுத்து, செய்முறை, நோ்முகத் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். தோ்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com