Job
Job

தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், சுருக்கெழுத்தர் வேலை

சிஎஸ்ஐஆர்-இன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு
Published on

சிஎஸ்ஐஆர்-இன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். NEERI/01/2025

பணி: Junior Secretariat Assistant

1. General

காலியிடங்கள்: 14

2. Finances & Accounts

காலியிடங்கள்: 5

3. Stores & Purchase

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.36,493

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.49,623

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நல்ல திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம். இதர பிரிவினர் ரூ.500. செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.neeri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com