பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்
இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்
Published on
Updated on
2 min read

பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 2023-2024 ஆம் ஆண்டில் 12,387 கோடிக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக மலேசியா, அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவிலான ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.

இந்நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: C-18/2025

பணி: Works Engineer, Civil

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.36,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Works Engineer, Electrical

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.36,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Safety Engineer

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி : பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Health and Safety) பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் கவரின் மீது விளம்பர எண் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

JGM/HRM, IRCON International Limited,C-4, District Centre, Saket, New Delhi - 110 017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.8.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு recruitment@ircon. org என்ற மின்னஞ்சல் முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited for the post of Works Engineer in the IRCON

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com