

கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் கடற்படை வீரா்களிடம் இருந்து டிச.17-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள அதிவிரைவுப் படகுகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள முன்னாள் கடற்படை வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: படகு தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளா்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.36,900
பணி: படகு தொழில்நுட்ப தலைமைக் காவலா்
காலியிடங்கள்: 41
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
சம்பளம்: மாதம் ரூ.20,600
தகுதி: 1.12.2025 தேதியின்படி 50 வயதுக்கு கீழ் உள்ள முன்னாள் இந்திய கடலோர காவல் படை மற்றும் முன்னாள் இந்திய கடற்படை வீராா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபாா்ப்பு, எழுத்து தோ்வு, வாய்மொழி தோ்வு போன்றவற்றுக்கு தகுதியானவர்களுக்கு தனிப்பட்ட அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/drive/folders/118xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும், தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கூடுதல் காவல் துறை இயக்குநா், கடலோர பாதுகாப்பு குழுமம், காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக வளாகம், டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூா், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17.12.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.