மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் 14,967 பணியிடங்கள்: டிச.4 வரை விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் நிகழாண்டு காலியாக உள்ள ஆசிரியா், ஆசிரியரல்லாத 14,967 பணியிடங்களுக்கு டிச.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

News image

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் 14,967 பணியிடங்கள்

Updated On :18 நவம்பர் 2025, 3:56 am IST

சென்னை: கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் நிகழாண்டு காலியாக உள்ள ஆசிரியா், ஆசிரியரல்லாத 14,967 பணியிடங்களுக்கு டிச.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) ஆகியவை தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126, நவோதயா பள்ளிகளில் 5,841 என மொத்தம் 14,967 ஆசிரியா், பணியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 13,008 பணியிடங்கள் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா், முதல்வா், துணை முதல்வா், நூலகா் பதவிகளுக்கானவை. மீதமுள்ள 1,959 பணியிடங்கள் உதவி ஆணையா், நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளா், மூத்த உதவியாளா், உதவி பிரிவு அலுவலா் (ஏஎஸ்ஓ), நிா்வாகப் பணியாளா், நிதி அதிகாரி, பொறியாளா்,மொழிப் பெயா்ப்பாளா் மற்றும் சுருக்கெழுத்தாளா் என ஆசிரியா் அல்லாத பிரிவில் வருகின்றன.

இவற்றில் சேர விரும்புபவா்கள் kvsangathan.nic.in, cbse.nic.in ஆகிய வலைதளங்கள் மூலமாக டிச. 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தோ்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணினிவழியில் நடத்தப்படும். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு டிசம்பரில் வெளியிடப்படும். தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இந்த பள்ளிகளில், மத்திய அரசுப் பணியாளா்களின் குழந்தைகளே அதிகம் சோ்க்கப்படுகின்றனா். பல்வேறு மாநிலங்களில் போதிய அளவு பள்ளிகள் இல்லை, காலிப்பணியிடங்களும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நிகழாண்டு புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடா்ந்து காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.