அரசு உதவி வழக்குரைஞர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வு துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்குரைஞர், நிலை - II (தமிழ்நாடு பொதுப் பணிகள்) பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு தொடர்பாக....
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
Updated on
1 min read

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வு துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்குரைஞர், நிலை - II (தமிழ்நாடு பொதுப் பணிகள்) பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.18/2025

பணி: அரசு உதவி வழக்குரைஞர், நிலை -II

காலியிடங்கள்: 61

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் சட்டப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வழக்குரைஞர் சங்கத்தில் கட்டாயம் உறுப்பினராக இருப்பதோடு குற்றவியல் நீதிமன்றங்களில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வழக்கு நடத்தியிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தமிழை ஒரு மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும்.

பணி நியமனத்திற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் உடல் தகுதிச் சான்றிதழை பணி நியமனத்தின் போது நியமன அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 26 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 15.2.2026. பிற தேர்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கட்டம விலக்கு குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.12.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited only through online mode for direct recruitment to the post of Assistant Public Prosecutor, Grade-II in Prosecution Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com