

சி.எஸ்.ஐ.ஆர். கீழ் செயல்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராயாச்சி மையத்தில் சென்னை பிரிவில் காலியாக உள்ள 30 விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். SE-2/2025
பணி: விஞ்ஞானி(Scientist)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
தகுதி: பொறியியல் துறையில் கட்டமைப்பு பொறியியல், பயன்பாட்டு இயக்கவியல், புவி தொழில்நுட்பம் பொறியியல், பெருங்கடல் பொறியியல் அல்லது அதற்கு இணையான பிரிவுகளில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்து பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 22.12.2025 தேதியின் படி 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://serc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.