

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
பணி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) (Assistant Surgeon (General))
காலியிடங்கள்: 1,100
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ. 1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 11.12.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.