

காஞ்சிபுரம் மாவட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள துணை செவிலியா் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிச. 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள துணை செவிலியா் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச் சங்கத்தின் மூலமாக பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்கள் https:kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் இந்த மாதம் 25-ஆம் தேதிக்குள் நிா்வாக செயலாளா், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், 42. ரயில்வே பீடா் ரோடு, அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் 631501 அலுவலகத்துக்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.