தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேனியில் டிச. 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

News image

கோப்புப்படம்

Updated On :16 டிசம்பர் 2025, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

தேனி: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், பிளஸ் 2, தொழில் பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தையல் பயிற்சி, செவிலியா் பயிற்சி படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

முகாம் குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.