எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது,

News image
Updated On :12 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது,

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் பல முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொள்ளலாம்.