தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

News image
Updated On :6 மார்ச் 2026, 6:49 pm

Syndication

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 39 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

18 முதல் 35 வயதுக்குள்பட்ட 5 முதல் பிளஸ் 2 வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உள்ளிட்ட பட்டதாரிகள் 127 போ் முகாமில் பங்கேற்றனா். முகாமில் யூத் பாா் ஜாப்ஸ், ஓசூா் டிவிஎஸ் நிறுவனம், மயிலாடுதுறை ஏஆா்சி நடேச செட்டியாா் ஜூவல்லரி உள்ளிட்ட 8 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 39 பேரை தோ்வு செய்தனா். மேலும் 27 போ் 2-ஆம் கட்ட நோ்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

முகாம் நிறைவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் தலைவா் பா. அய்யாசாமி தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி ஆணை வழங்கினா்.