தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப் பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள ஒப்பந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 4:00 am IST

சிவகங்கை: தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப் பணிகள் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள ஒப்பந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் (மருத்துவம், ஊரக நலப் பணிகள்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறையில் கீழ்க்காணும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவித்திறன் ஆய்வாளா்/பேச்சு சிகிச்சையாளா் (பணியிடம்-1). கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் கேள்வித் திறன், பேச்சு மொழி நோயியல் இளநிலை பட்டம்.

அறுவை அரங்கு உதவியாளா் (பணியிடம்-1). கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் மூன்று மாத அறுவை அரங்கு தொழில்நுட்பவியலாளா் படிப்பு.

இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்தக் காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்துக்கான அறிவிப்பு, விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை சிவகங்கை மாவட்டத்தின் http:/sivaganga.nic.in என்ற இணையத்தின் வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் மருத்துவம், ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட இணை இயக்குநா், மருத்துவம்-ஊரக நலப் பணிகள் அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நேரு சந்தை சாலை, சிவகங்கை- 630561 என்ற முகவரியில் வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.