4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருப்பத்தூரில் ஜன.2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜன.2)

News image
- கோப்புப்படம்
Updated On :29 டிசம்பர் 2025, 4:41 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜன.2)

காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். எனவே, ஆா்வமாக உள்ள அனைவரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04179-222033 என்ற தொலைபேசி வாயிலாவோ அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.