மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்திய வேளாண்மைத் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய வேளாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள 55 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2025, 9:31 am

DIN

இந்திய வேளாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள 55 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். AIC/Rect/MT-2024-25

பணி: Management Trainee

பிரிவு: IT

காலியிடங்கள்: 20

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Actuarial Science

காலியிடங்கள்: 5

தகுதி: புள்ளியியல், கணிதம், காப்பீட்டு கணிப்பு அறிவியல், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Generalist

காலியிடங்கள்: 30

தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,925 - 96,765

வயதுவரம்பு: 1.12.2024 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினரை தவிர, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.2.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.