மிஸ் பண்ணிடாதீங்க... 4576 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(ஏய்ம்ஸ்) காலியாக உள்ள 4576 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மிஸ் பண்ணிடாதீங்க... 4576 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(ஏய்ம்ஸ்) காலியாக உள்ள 4576 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏய்ம்ஸ் ஆல் நடத்தப்படும் பொதுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அறிவிப்பு எண். 171/2025

பதவி: Paramedical

மொத்த காலியிடங்கள்: 4576

பதவி: Assistant Dietician/Dietician பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Food and Nutrition பாடத்தில் எம்.எஸ்சி முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Assistant/Administrative Officer/ Junior Assistant பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Data Entry Operator பணிக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் 1 மணி நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: LDC/UDC பணிக்கு விண்ணப்பிப்போர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Assistant Engineer, Junior Engineer பணிக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இதர பணிகளுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பாராமெடிக்கல் பிரிவு, தொழில்நுட்ப பிரிவுகளில் ஏய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஏய்ம்ஸ் நிறுவன தேர்வு குழுவால் நடத்தப்படும் பொதுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 26.2.2025 மற்றும் 28.2.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.3000, எஸ்சி, எஸ்டி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,400 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com