கனரா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 9600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 60 சிறப்பு அலுவலர் பணி
கனரா வங்கி
கனரா வங்கி
Published on
Updated on
1 min read

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 9600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 60 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும் என்பதால் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

பணி: Specialist Officer

மொத்த காலியிடங்கள்: 60

காலியிடங்கள் விவரம்:

1. Application Developer - 7

2. Cloud Administrator - 2

3. Cloud Security Analyst - 2

4. Data Analyst - 1

5. Data Base Administrator - 9

6. Data Engineer - 2

7. Data Minig Expert - 2

8. Data Scientist - 2

9. Ethical Hacker & Penetration Tester - 1

10. ETL Specialist - 2

11. GRC Analyst, IT Governance - 1

12. Information Security Analyst - 2

13. Network Administrator - 6

14. Network Security Analyst - 1

15. Officer(IT) API Management - 3

16. Officer(IT) Database/PL SQL - 2

17. Officer(IT) Digital Banking - 2

18. Platform Administrator - 1

19. Private Cloud & VM Ware Administrator - 1

20. SOC Analyst - 2

21. Solution Architect - 1

22. System Administrator - 8

தகுதி: கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், இஇஇ, டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.12.2024 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மையம் குறித்த விவரங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com