ஜவுளித் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழுள்ள டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தில் காலியாக உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஜவுளித் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
2 min read

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழுள்ள டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தில் காலியாக உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Director (Laboratory) – 2

சம்பளம்: மாதம் ரூ. 67,100 - 2,08,700

தகுதி: இயற்பியல், வேதியியல் பிரிவில் முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட துறையில்

ஆராய்ச்சி பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Director (Laboratory) – 4

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500

தகுதி: இயற்பியல், வேதியியல் பிரிவில் முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Director (EP&QA) – 5

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500

தகுதி: ஜவுளி உற்பத்தி, தொழில்நுட்பம் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டத்துடன் முன் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Statistical Officer – 1

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500

தகுதி: கணிதம், புள்ளியியல் துறையில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Quality Assurance Officer (EP&QA) – 15

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் ஜவுளி உற்பத்தி, தொழில்நுட்பம் பிரிவில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ அல்லது

கைத்தறி தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் வகுப்பில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனமான வாரணாசி , சேலம் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Quality Assurance Officer(Lab) - 4

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: அறிவியல், டெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டெக்ஸ்டைல்ஸ் வேதியியல் பிரிவில் டிப்ளமோ முடித்து 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Field Officer - 3

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல், வணிக மேலாண்மை துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 22 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Librarian- 1

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் நூலக அறிவியல் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accountant - 2

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பி.காம் முடித்து 4 அல்லது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Quality Assurance Officer(Laboratory) - 7

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

தகுதி: அறிவியல், டெக்னாலஜி பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டெக்ஸ்டைல்ஸ் வேதியியல் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 19 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Investigator - 2

சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 22 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Translator - 1

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஹிந்தியில் இருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Statistical Assistant - 1

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

தகுதி: கணிதம், புள்ளியியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: junior Statistical Assistant - 1

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.textilescommittee.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

இது குறித்த முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com