இந்தியக் கடலோர காவல் படை
இந்தியக் கடலோர காவல் படை

இந்தியக் கடலோர காவல் படையில் உதவியாளர் வேலை!

இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

இந்தியக் கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant

காலியிடங்கள்: 34

சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Leading Hand Fireman

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ. 5,200 - 20,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting Appliances இல் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Directorate of EP, CP, A & R (for SCSO(CP)), Coast Guard Head Quarters, National Stadium Complex, New Delhi - 110 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com