ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு(அப்ரண்டீஸ்) பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
Published on
Updated on
1 min read

பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு(அப்ரண்டீஸ்) பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: HCL/KCC/HR/

பயிற்சி:Trade Appt/2025

பிரிவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Mate (Mines)- 37

2. Blaster (Mines) - 36

3. Front Office Assistant - 20

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Diesel Mechanic - 4

5. Fitter - 10

6. Turner - 7

7. Welder (Gas & Electric) - 10

8. Electrician - 30

9. Electronics Mechanic - 4

10. Draughtsman (Civil) - 4

11. Draughtsman (Mechanical)- 5

12. Computer Operator & Programming Assistant - 33

13. Surveyor - 4

14. Pump Operator Cum Mechanic - 4

15. Refrigeration & Air Conditioner -1

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப் பட்ட டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Mate (Mines), Blaster (Mines) மற்றும் Front Office Assistant பிரிவிற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும், இதர டிரேடுகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ இல் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன இணையதளத்திலும் வெளியிடப்படும்.

2023-க்கு பின் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சியில் சேருபவர்களுக்கு ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவன விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeshipindia. gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வித்தகுதி குறித்த விபரங்களை பதிவு செய்துவிட்டு, பின்னர் www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.6.2025

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் ஆலைகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com