விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 153 குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையில் குரூப் 'சி' பணிகள்
இந்திய விமானப் படையில் குரூப் 'சி' பணிகள்
Published on
Updated on
2 min read

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 153 குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: 01/2025

பணி: Civilian Mechanical Transport Driver

காலியிடங்கள் :8

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mess Staff

காலியிடங்கள்: 7

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு மெஸ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cook (OG)

காலியிடங்கள் : 12

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய உணவுகளை தயார் செய்வதில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு ஆண்டு கேட்டரிங் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 14

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: House Keeping Staff

காலியிடங்கள்: 31

தகுதி: பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வீட்டு பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MTS (Chowkidar)

காலியிடங்கள்: 53

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான பணிகளை செய்யும் வகையில் ஆரோக்கியமான உடற்திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது காவலாளி, லாஸ்கர், தோட்டக்காரர் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper

காலியிடங்கள்: 16

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் பெற்றிருக்க வேண்டும். பண்டக காப்பாளர் (Store Keeper) பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Carpenter, Painter, Vulcanizer, Laundryman

காலியிடங்கள்: 10

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற் தகுதி, தொழிற்திறன் மற்றும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனதுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.6.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com