கோவா மோர்முகாவ் துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர், டிரெய்னி பைலட் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Engineer(Civil)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளைநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trainee Pilot
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Foreign Going Ship பணிக்குரிய பைலட் பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: DY. CHIEF ENGINEER
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளைநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: SR. DY. SECRETARY
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000
வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளைநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தொழில்துறை, வணிகம், அரசு நிறுவனங்களில் பொது நிர்வாகம், பணியாளர், தொழில்துறை உறவுகள் போன்ற துறைகளில் நிர்வாகப் பிரிவில் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் நலன் அல்லது தொடர்புடைய பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது சட்டப் பிரிவில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mptgoa.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, அதனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Office of the secretary, General Administration Department, Mormugao port Authority,'SAARASI'3rd Floor, Administrative Office Building, Headland Bada, Goa - 403804
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17.2.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from eligible candidates for recruitment on regular basis to the below mentioned posts in the Mormugao Port Authority, Headland, Sada, Goa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் புராஜெக்ட் பணிகள்!







