மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 120 மூத்த நிர்வாகப் பயிற்சிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். BSNLCO-11/12(11)/1/2025-RECTT-CO-Part (1)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Executive Trainee (DR) Telecom
காலியிடங்கள்: 95
தகுதி: பொறியியல் துறையில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்சாரவியல் போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம், தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான துறையில் பொறியியல் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
பணி: Senior Executive Trainee (DR) Finance
காலியிடங்கள்: 25
தகுதி: பட்டயக் கணக்காளர் (சிஏ), செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் (சிஎம்ஏ) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 7.3.2026 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.1,250, இதர அனைத்து பிரிவினரும் ரூ.2,500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 29.3.2026
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.3.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
BSNL Sanchar Nigam Ltd.(BSNL), proposes to recruit Senior Executive Trainee Posts(Direct Recruitment) in Telecom & Finance streams from open market(External Candidates).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பயண டோக்கன்! எங்கெல்லாம் வழங்கப்படும்?

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிப்பு

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விடியோக்கள்
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu




