வேலை... வேலை... வேலை... தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் உதவியாளர் வேலை!

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை... வேலை... வேலை... தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் உதவியாளர் வேலை!
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 02/2025-26

பணி: Junior Secretariat Assistant (JSA)

காலியிடம்: 1 (PWD)

சம்பளம்: மாதம் ரூ. 29,200 92,300

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Electronics Technician)

காலியிடம்: 1 (PWD)

சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் படிப்புடன் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Graphic Assistant)

காலியிடம்: 1 (PWD)

சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fine Arts & Commercial Arts, Graphics & Visual Design பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ, பட்டப்படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nittrc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து ஜூலை 9 ஆம் தேதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, National Institute of Technical Teachers Training and Research, Taramani, Chennai - 600 113, Tamil Nadu, India.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.6.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com