எஸ்பிஐ வங்கியில் புரொபஷனரி அலுவலர் வேலை: காலியிடங்கள் 541

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி
Published on
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Probationary Officer Posts(புரொபஷனரி அலுவலர்)

மொத்த காலியிடங்கள்: 541

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

தகுதி: 30.9.2025 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அதாவது 1.4.2004-க்கு பின்போ,2.4.1995-க்கு முன்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேரவு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மற்றும் தேர்வு மையம்: முதல் நிலைத்தேர்வு ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். தமிழ்நாட்டில் - சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், விழுப்புரம்.

முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெரும். சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: அக்டோர், நவம்பர் 2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi. co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

SBI fill the 541 Probationary Officer Posts. This online facility will be available on the Official website https://sbi.co.in from 24.06.2025 to 14.07.2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com