வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,019 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,019 ஜிடிஎஸ் பதவியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிப்பு குறித்து...
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை
தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை
Updated on
2 min read

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,019 ஜிடிஎஸ் பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Branch Postmaster,Assistant Branch Postmaster,Gramin Dak Sevaks

காலியிடங்கள்: 2,019

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

அரக்கோணம் - 41, செங்கல்பட்டு - 60, சென்னை நகர மத்திய பிரிவு - 3, சென்னை நகர வடக்கு பிரிவு - 1, சென்னை - 18, கோவை - 30, கடலூர் - 56, தர்மபுரி - 45, திண்டுக்கல் - 61, ஈரோடு - 61, காஞ்சிபுரம் - 55, கன்னியாகுமரி - 34, காரைக்குடி - 15, கரூர் - 43, கோவில்பட்டி - 50, கிருஷ்ணகிரி - 51, கும்பகோணம் - 56, மதுரை - 47, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 42, நாமக்கல் - 65, நீலகிரி - 42 , பட்டுக்கோட்டை - 37, பொள்ளாச்சி - 45, புதுச்சேரி - 75, புதுக்கோட்டை - 40, ராமநாதபுரம் - 45, ஆர்எம்எஸ் சிபி - 3, ஆர்எம்எஸ் எம்ஏ - 14, ஆர்எம்எஸ் எம் - 8, ஆர்எம்எஸ் டி - 12 , சேலம் கிழக்கு - 46, சேலம் மேற்கு - 40, சிவகங்கை - 34, ஸ்ரீரங்கம் - 45, தாம்பரம் - 71, தஞ்சாவூர் - 58, தேனி பிரிவு - 36, திருச்சிராப்பள்ளி - 65, திருநெல்வேலி - 50, திருப்பத்தூர் - 44, திருப்பூர் - 95, திருவண்ணாமலை - 99, தூத்துக்குடி - 39, வேலூர் - 29, விருதுநகர் - 33, விருத்தாசலம் - 54

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும், கணினி பணி செய்யும் திறன், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு மாதம் ரூ. 12,000 - ரூ.29,380, உதவி கிளை அஞ்சல் அலுவலர், டாக் சேவகர்கள் பணிக்கு மாதம் ரூ. 10,000 - ரூ..24,470

வயதுவரம்பு: 16.2.2026 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.2.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TN Post Office GDS Recruitment 2026 for 2, 019 Branch Postmaster, Assistant Branch Postmaster, Dak SevaksPosts

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை
வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com