தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வெள்ளிக்கிழமை(மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 போக்குவவரத்துக் கழகங்கள் மூலமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. நகர், புறநகர் என அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை இருப்பதால் பெரும்பாலான மக்கள் நாள்தோறும் போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் சேவை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 நடத்துநர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வெள்ளிக்கிழமை(மார்ச் 21 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்கள் என மொத்தம் 3274 பணியிடங்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி 24 வயது பூா்த்தியாகியிருப்போா் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநா் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத முன்அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப்பணி வில்லை, செல்லத்தக்க நடத்துநா் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
பணிக்கான தகுதியும் விருப்பமும் உடையவா்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தி ஏப்.21-க்குள் விண்ணப்பத்தை www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் ரூ.590 செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் எழுத்து, செய்முறை, நோ்முகத் தோ்வுகள் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். தோ்வு குறித்த விவரங்கள் விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறைத் துறை காலிப் பணியிடங்கள்: உள் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் ஏ.ராஜ்மோகன்

திண்டுக்கல் மாநகராட்சியில் காலிப் பணியிடங்களால் நிா்வாகச் சிக்கல்!

தில்லி: பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ஓட்டுநர், நடத்துநர் கைது!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



