
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு மாற்றுவதற்காக நிறுவப்பட்ட மாவட்ட அளவிலான பண்ணை அறிவியல் மையம் கிருஷி விக்யான் கேந்திரா(கேவிகே). இந்த மையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலகத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர், சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer (Grade-III)
காலியிடம் : 1
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியத் தெரிந்திருப்பதுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனுடன் தமிழியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 7 ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 27- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Driver
காலியிடம்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 7 ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 18-லிருந்து 27-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் திறன் (தட்டச்சு, ஓட்டுநர்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விபரம் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.250. இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.500. கட்டணத்தை ICAR-KVK, Valikandapuram, Perambalur என்ற பெயருக்கு வங்கி வரைவேலையாக ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.roeverkvk.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிகழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Chairman, ICAR - KRISHI VIGYAN KENDRA Hans Roever Campus, Valikandapuram, Perambalur - 621115.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 6.5.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.