
மும்பையை சேர்ந்த நிறுவனத்தில் ரூ. 10 ஊக்கத்தொகையுடன் வேலை இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு இருப்பதாக, அந்நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டது.
ஆனால், வெறும் ரூ. 10 மட்டுமே ஊக்கத்தொகையாக அவர்கள் குறிப்பிட்டிருந்ததுதான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. மேலும், இந்த வேலையின் தகுதிகளாக பலவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, இந்த வேலைக்கு சுமார் 2000 பேர்வரையில் விண்ணப்பித்ததுதான் பெருங்கொடுமை என்றும் சிலர் பரிதாபச் சிரிப்புடன் கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதுகுறித்து, எக்ஸ் பயனர்களில் ஒருவர் தெரிவித்ததாவது, இவ்வளவு பணத்தை எப்படி செலவழிப்பது? என்று கருத்து பதிவிட்டார்.
மற்றொருவர், 10-க்கு அருகில் `கே’-வை (10K) உள்ளிட அந்த நிறுவனம் மறந்து விட்டதா? அல்லது மறுத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ஒருவர், `இதற்கு இலவசமாக சேர்ந்து விடலாமே’ என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.