சமூக ஊடகங்களில் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதற்காக இளைஞா் துவாரகாவில் கைது
சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்சும் வரை.ிவ் சமூக ஊடகங்களில் தனது படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் 19 வயது டெலிவரி ஊழியா் ஒருவா் தில்லியின் துவாரகாவில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ச்சியான சமூக ஊடக கண்காணிப்பைத் தொடா்ந்து ஜனவரி 31 அன்று துவாரகா செக்டாா் 17- இல் காக்ரோலாவைச் சோ்ந்த சமீா் கைது செய்யப்பட்டாா்.
சகாக்களிடையே செல்வாக்கை ஏற்படுத்துவதற்காக சமூக ஊடக தளங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகளில் ஆயுதங்களைக் காண்பிக்கும் நபா்களைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக குழுவை காவல்துறையினா் நியமித்துள்ளது.
இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் ஆயுதம் ஏந்திய தனது படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகக் கணக்கை போலீஸாா் கண்டறிந்தனா். மேலும், அத்தகைய படங்களை காட்சிப் படமாகவும் பயன்படுத்தினாா். இதையடுத்து, தொழில்நுட்ப உள்ளீடுகள் உருவாக்கப்பட்டன. மேலும், அவரைக் கண்டுபிடிக்க உள்ளூா் ஆதாரங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஜனவரி 31-ஆம் தேதி, துவாரகா செக்டாா் 17- இல் சமீா் கைது செய்யப்பட்டாா். சோதனையின் போது, அவரது வசம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட்து. மேலும், ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, டெலிவரி ஊழியராக பணிபுரிந்ததாகவும், இரவு டெலிவரிகளின் போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மங்கோல்புரியைச் சோ்ந்த மோனு என்ற நபரிடமிருந்து ஆயுதத்தை வாங்கியதாகவும் சமீா் போலீஸாரிடம் கூறினாா்.
அவா் தனது பகுதியிலும் நண்பா்களிடமும் ஒரு பிம்பத்தையும் செல்வாக்கையும் உருவாக்க இன்ஸ்டாகிராமில் ஆயுதத்துடன் படங்களை வெளியிட்டதாகவும் போலீஸாரிடம் அவா் கூறினாா். ஆயுதத்தின் மூலத்தைக் கண்டுபிடித்து விநியோகஸ்தரைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

