திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணி நியமனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
பணி: கூர்க்கா
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: திருவலகு
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: கால்நடை பரமாரிப்பாளர்
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: பெரிய சன்னதி உடல்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
பணி: பெரிய சன்னதி வீரவண்டி
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளில் இருந்து இது தொடர்பான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
பணி: பெரிய சன்னதி சோமக்கலம் மற்றும் இதர வாத்தியங்கள்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளில் இருந்து இது தொடர்பான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
பணி: தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600
தகுதி: தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளில் இருந்து இது தொடர்பான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி யானைப்பாகன்
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சலவையாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: கூட்டுபவர்
காலியிடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்து மதத்தைச் சார்ந்த 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
பணியிடங்களின் எண்ணிக்கை பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை இல்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அதன் உண்மை தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயிலின் https://srirangamranganathar.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 620006".
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.11.2025
விண்ணப்பப் படிவம் மற்றும் இதர நிபந்தனைகளை அலுவலக வேலை நேரங்களில் தெரிந்து கொள்ளலாம். அல்லது https://srirangamranganathar.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Summary
Trichy Srirangam Ranganatha swamy Temple recruitment notification to fill the 31 Junior Assistant...post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

செயற்கை உறுப்புகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை: டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பொதுத்துறை நிறுனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



