

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 226 செவிலியர் அலுவலர் (குரூப் 'பி') பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நவ.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செவிலியர் அலுலுவர்(குரூப் பி)
மொத்த காலியிடங்கள்: 226 (பொது-90, இடபிள்யூஎஸ்-22, எம்பிசி-40, ஓபிசி-26, இபிசி-4, பிசிஎம்-5, எஸ்சி-35, எஸ்டி-2, பிடி-2, உள்ஒதுக்கீடாக மாற்றுத்திறனாளிகள்-10)
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி., பொது செவிலியர் மற்றும் செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து ஏதாவதொரு மாநில செவிலியர் கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். இதில் எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: அதிகபட்சம் 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வு முறை மதிப்பெண்களில், மேல்நிலை படிப்பில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், செவிலியர் படிப்பில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செவிலியர் படிப்பு பதிவு செய்த நாளிலிருந்து ஓராண்டுக்கு 1.5 மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு 15 மதிப்பெண்கள், கரோனா -19 காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும்.
மேலும், அரசு நிறுவனங்களில் குறைந்தது 100 நாள்கள் முதல் ஒரு ஆண்டு வரை பணிபுரிந்தவர்களுக்கு 2 மதிப்பெண், 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 3 மதிப்பெண், 18 முதல் 24 மாதங்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும்.
இடஒதுக்கீடு விதியை பின்பற்றி, ஒட்டுமொத்த தகுதி பட்டியலில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியல் மற்றும் ஒரு காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு https://igmcri.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது, இடபிள்யூஎஸ், எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி பிரிவினர் ரூ.250, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் இயக்குநர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விணணப்பிக்கும் முறை: https://igmcri.edu.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து நவ.6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநர், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வழுதாவூர் சாலை, கதிர்காமம், புதுச்சேரி-605009 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.