இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் போன்ற தொழில்நுட்பம் சாராத 8,858 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
இளங்கலை் பட்டம் அடிப்படையிலான தொழில்நுட்பம் சாராத காலியிடங்கள் விவரம்:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: RB NTPC 2025 CEN 06/2025
மொத்த காலியிடங்கள்: 5,810
பணி: Chief Commercial Cum Ticket Supervisor
காலியிடங்கள்: 161
சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Station Master
காலியிடங்கள்: 615
சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Goods Train Manager
காலியிடங்கள்: 3416
சம்பளம்: மாதம் ரூ.29,200 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Junior Accounts Assistant Cum Typist
காலியிடங்கள்: 921
சம்பளம்: மாதம் ரூ.29,200 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Senior Clerk Cum Typist
காலியிடங்கள்: 638
சம்பளம்: மாதம் ரூ.29,200 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Traffic Assistant
காலியிடங்கள்: 59
சம்பளம்: மாதம் ரூ.22,500 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீட்டின் அடிப்படையில் வயதுவரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணக்காளர் மற்றும் கிளார்க், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிப்போர் கணினியில் ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளி, எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினர் ரூ.250, இதர அனைத்து பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.11.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பிளஸ் 2 தேர்ச்சி அடிப்படையிலான தொழில்நுட்பம் சாராத காலியிடங்கள் விவரம்:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: CEN 07/2025
மொத்த காலியிடங்கள்: 3,058
பணி: Commercial Cum Ticket Clerk
காலியிடங்கள்: 2,424
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள்
பணி: Accounts Clerk - Typist
காலியிடங்கள்: 394
பணி: Junior Clerk - Typist
காலியிடங்கள்: 163
பணி: Trains Clerk
காலியிடங்கள்: 77
சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 + இதர சலுகைகள்.
தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணக்காளர் மற்றும் இளநிலை கிளார் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27.11.2025 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீட்டின் அடிப்படையில் வயதுவரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளி, எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினர் ரூ.250, இதர அனைத்து பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.11.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.