ரூ.1.42 லட்சம் சம்பளத்தில் புலனாய்வுத்துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும்புலனாய்வுத் துறையில் நிரப்பப்பட உள்ள 258 உதவி புலனாய்வு அதிகாரி (கிரேடு 2) பணியிடங்கள் தொடர்பாக...
புலனாய்வுத்துறையில் வேலை
புலனாய்வுத்துறையில் வேலை
Published on
Updated on
2 min read

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும்புலனாய்வுத் துறையில் நிரப்பப்பட உள்ள 258 உதவி புலனாய்வு அதிகாரி (கிரேடு 2) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமீப காலமாக மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது 2025-ஆம் ஆண்டுக்கான உதவி மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு 2 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய அளவில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலியாக உள்ள 258 உதவி மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு 2 பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: உதவி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி (கிரேடு 2)

மொத்த காலியிடங்கள்: 258

துறைவாரியான காலியிடங்கள்

1. கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் - 90

2. எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் - 168

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400 வரை வழங்கப்படும். அடிப்படை சம்பளத்தில் 20 சதவீதம் சிறப்பு பாதுகாப்பு செலவு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கேட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 16.11.2025 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 1 காலிப்பணியிடத்திற்கு 10 மடங்கு அதிகபடியான ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

தகுதியானவர்களுக்கு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இறுதியாக அனைத்து கட்ட மதிப்பெண்களையும் கருத்தில் கொண்டு இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி, பிசி பிரிவினருக்கு ரூ.200, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது NCS portal www.ncs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applicants are advised to go through all parameters under different paras & sub-paras mentioned below & satisfy themselves about their suitability in terms of age limit, essential qualifications, etc. for the post of ACIO-II/Tech before applying. Candidates fulfilling eligibility criteria of the post,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com