செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள கிரேடு ஏ பணியிடங்களுக்கு...
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)
Published on
Updated on
1 min read

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள கிரேடு ஏ பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

பணி: Assistant Manager(Officer Grade-A)

பிரிவு: பொது(General)

காலியிடங்கள்: 56

தகுதி: சட்டம். சிஏ, சிஎப்ஏ, சிஏஐ பட்டம் அல்லது பொறியியல் துரையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: சட்டம் (Legal)

காலியிடங்கள்: 20

தகுதி: சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Information Technology

காலியிடங்கள்: 22

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவியல், ஐடி பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Research

காலியிடங்கள்: 4

தகுதி: பொருளாதாரம், வணிகம், வணிக நிர்வாகம், பொருளாதார அளவியல், அளவீடு பொருளாதாரம், நிதி பொருளாதாரம், கணிதம், வணிக பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வணிக பகுப்பாய்வு போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Official Language

காலியிடங்கள்: 3

தகுதி : ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலை பட்டம் அல்லது சமஸ்கிருதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Civil

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.9.2025 தேதியின் படி 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 62,500 - 1,26,100

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sebi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2025

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

In partial modification to the notification published on SEBI website on October 30, 2025 for recruitment of Officer Grade A (Assistant Manager) 2025, it is hereby informed for the general information of all concerned that the number of posts in respect of General and Research streams have been increased as under

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com