டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு தகுதியானவர்கள் விரைந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.

பணி: Technical Assistant, Multi Specialist Technician

காலியிடங்கள் : 2

சம்பளம் : மாதம் ரூ. 30,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, இசி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் ஆங்கிலம், தமிழில் நல்ல திறன்பட பேசும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Assistant

காலியிடம் : 1

சம்பளம் : மாதம் ரூ.30,000

தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவமும் (Microsoft Word, Excel, Power Point) மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Finance & Accounts)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 50,000

தகுதி: வணிகவியல் துறையில் இளநிலை பட்டம், சிஏ அல்லது ஐசிடபுள்யுஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது வணிகவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tidelpark.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.11.2025

மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

TIDEL PARK RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF TECHNICAL ASSISTANT / Multi Specialist

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com