
மதுரையில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்பு எண். AIIMS/MDU/IRC/EM-Funded/ICMR/2024/06/33
பணி: Project Technical Support II
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 24,000
தகுதி: அறிவியல் பாடத்தில் + 2 தேர்ச்சியுடன் எம்எல்டி, டிஎம்எல்டி தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொது சுகாதாரம், மருத்துவ சமூகப் பணி, நர்சிங், எம்.எல்.டி., சமூகவியல், உளவியல், மருந்தியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், தொடர்புடைய சுகாதார அறிவியல், வேதியியல், இயற்பியல், புள்ளியியல் ஆகிய துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடை பெறும் இடம், தேதி பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். அதன்பிறகு தேவைக்கேற்ப பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsmadurai.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைத்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றெப்பம் செய்து ஒரே பிடிஎப் ஆக மாற்றி விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.10.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.