தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லி மாநில காவல் துறையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர்கள் பணிகள் தொடர்பாக...
மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
மத்திய பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
Published on
Updated on
2 min read

புதுதில்லி மாநில காவல் துறையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்பு எண்.: HQ - C-3022/01/2025/C-3

மொத்த காலியிடங்கள்: 552

பணி: Head Constable (Wireless Operator & Teleprinter)

1. Head Constable (AWO/TPO)-Male (Open) – 285

2. Head Constable (AWO/TPO)-Male (Ex-SM) – 49

3. Head Constable (AWO)/(TPO)-Male (Departmental) – 36

4. Head Constable (AWO/TPO)-Female (Open) – 163

5. Head Constable (AWO/TPO)-Female (Departmental) – 19

சம்பளம்: மாதம் ரூ.25,500- 81,100

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்குஅரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.

தகுதி: கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanic-cum-Operator, Electronic Communication System பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் 15 நிமிடத்தில் 1000 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1600 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 5 நிமிடங்களிலும் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 81 செ.மீ. அகலமும் 5 செ.மீ. விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்எஸ்சி நடத்தும் உடற்திறன் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற் தகுதி, உடன்திறன் தகுதி, மருத்துவத்தகுதி மற்றும் எஸ்எஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், தூத்துக்குடி, கரூர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026. எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.10.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

The Staff Selection Commission will conduct an open competitive examination for recruitment of Head Constable (Assistant Wireless Operator (AWO)/Tele-Printer Operator (TPO)) in Delhi Police. Candidates from all parts of the country will be eligible to apply.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com