
மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியும் அனுபமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr. Consultant/Consultant (NIASS) - 1
பணி: Sr. Consultant/Consultant (Operations) - 1
பணி: Sr. Consultant/Consultant (Engineering) - 2
பணி: Sr. Consultant/Consultant (Air Conditioning) - 1
பணி: Sr. Consultant/Consultant (Civil)- 2
சம்பளம்: மேற்கண்ட பணிகளில் Sr. Consultant பணிக்கு மாதம் ரூ. 1,00,000 + இதர சலுகைகள், Consultant பணிக்கு மாதம் ரூ.75,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கான தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற விவரங்களை அதிகாரப்பூர்வ இணையத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி: Safety Officer - 2
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000
பணி: Dy. Chief of Flight Safety -1
சம்பளம்: மாதம் ரூ. 90,000 - 2,40,000
பணி: Air Safety Officer - 1
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: பொறியியல் துறையில் Aeronautical, Aerospace, Mechanical, Electrical, Electronics Engineering பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Developer
காலியிடம்: 1
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: பொறியியல் துறையில்Computer Science, Computer Engineering, Information System, Information Technology, Electrical, Electronics and Communication, Electronics and Instrumentation, Electronics Design & Technology, Applied Electronics, Electronics & Telecommunication ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Official Language)
காலியிடம்: 1
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை பாடங்களாக கொண்டு ஏதாவதொரு முது நிலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை Pawan Hans Limited, Delhi, Noida என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.pawanhans.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை குறிப்பிட இடத்தில் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Head (HR), Pawan Hans Limited, (A Government of India Enterprise), Corporate Office, C-14, Section - 1, Noida - 201301, (U.P)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.10.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.