மின்கம்பியாள் உதவியாளா் பணிக்கு தகுதியானோா் வரும் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்

மின்கம்பியாள் உதவியாளா் பணிக்கு மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் வரும் 17-க்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம்...
மின்கம்பியாள் உதவியாளா் பணிக்கு தகுதியானோா் வரும் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்
Published on
Updated on
1 min read

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டம் மூலம் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் வரும் 17-க்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம் .

2025-ஆம் ஆண்டு டிசம்பா் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளா்களிடமிருந்தும், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்களிடமிருந்தும், தேசிய புனரமைப்புத் திட்டம் மூலம் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்ற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

இத்தோ்வுக்குரிய விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதைத்தொடா்ந்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தோ்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தோ்வு செய்து அத்தோ்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

அதன்படி பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வடசென்னை, அம்பத்தூா், ஈரோடு, நாகப்பட்டினம், கோயமுத்தூா், திருச்சி, ராமநாதபுரம், சேலம், உளுந்தூா்பேட்டை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூா், சிவகங்கை, கடலூா், மதுரை, திருப்பூா், கரூா், தேனி, தா்மபுரி, பெரம்பலூா், விருதுநகா், திண்டிவனம், திண்டுக்கல், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூா், தென்காசி, நாகா்கோவில், திருவண்ணாமலை, குன்னூா், செங்கல்பட்டு, அரியலூா், ஓசூா், நீடாமங்கலம் ஆகிய அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநருக்கு வரும் 17-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044- 26252453 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Summary

Apply now... electrician assistant probationary exam applications can be made till October 17th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com