
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர்(22), உதவிப் பிரிவு அலுவலர்(3), உதவியாளர்(5) மற்றும் உதவியாளர்(2) என மொத்தம் 32 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Section Officer (Secretariat)
காலியிடங்கள்: 22
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் அல்லது அசிஸ்டென்ட் பதவிகளில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை வரைவு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.
பணி: Assistant Section Officer (Secretariat)
காலியிடங்கள்: 3
தகுதி: வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது நீதித்துறை அமைச்சுப் பணியில் அசிஸ்டென்ட் பதவியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.
பணி: Assistant (Secretariat)
காலியிடங்கள்: 5
தகுதி: இளங்கலைப் பட்டம் மற்றும் பட்டம் பெற்ற பிறகு ஜூனியர் அசிஸ்டென்ட் அல்லது அசிஸ்டென்ட் பதவிகளில் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை வழங்கப்படும்.
பணி: Assistant (Finance)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை வழங்கப்படும்.
தகுதி: வணிகவியல், பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் அல்லது அசிஸ்டென்ட் பதவிகளில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100. இருப்பினும், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி,எஸ்சி(ஏ), எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கு தேர்வுக் கட்டணம் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு இலவச வாய்ப்புகளும், பிசிஎம், பிசி, எம்பிசி, டிசி பிரிவினருக்கு மூன்று இலவச வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது தாள் I (பொதுத் தமிழ்) மற்றும் தாள் II (பொது ஆங்கிலம்) என இரு பிரிவுகளாக நடைபெறும். எழுத்துத் தேர்வில் தகுதி பெறுவோருக்குச் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.11.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.