இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸ்கியூட்டிவ் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 348 எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்கள் தொடர்பாக...
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸ்கியூட்டிவ் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
Published on
Updated on
2 min read

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி. இது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் 650 கிளைகளைக் கொண்டுள்ளது. இது அதன் தோராயமான 1,65,000 தபால் நிலையங்கள் மூலம் அஞ்சல் துறையின் வலையமைப்பைப் பயன்படுத்தி, அதன் மூலம் 3 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் டாக் சேவகர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வாசலுக்கே வங்கி சேவைகளை கொண்டு செல்வதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுப் பணி அறிவிப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்.

பணி: Executive

காலியிடங்கள்: 348

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

கோவா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி தலா - 1, மிசோரம் மற்றும் சிக்கிம் தலா - 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் தலா - 3, கேரளம், மணிப்பூர் மற்றும் மேகாலயா தலா - 4, ஆந்திரம் மற்றும் நாகாலாந்த் தலா - 8, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் தலா - 9, ராஜஸ்தான் - 10, ஹரியாணா, உத்தரகண்ட், ஒடிசா தலா - 11, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் தலா - 12, பஞ்சாப் - 15, பிகார், தமிழ்நாடு தலா - 17, கர்நாடகம் -19, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் தலா 29,மகாராஷ்டிரம் - 31, உத்தரப் பிரதேசம் - 40.

சம்பளம்: மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.

தகுதி: மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திடமிருந்து ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2025

விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள பணி விவரங்கள், பணியிடம், சலுகைகள் என அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Apply now... ENGAGEMENT OF GRAMIN DAK SEVAK FROM DEPARTMENT OF POSTS TO IPPB ASEXECUTIVE

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com