குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் 4,662 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தோ்வு கடந்த ஜூலை 12 -ஆம் தேதி நடைபெற்றது.

இதில் 13.89 லட்சம் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்த நிலையில், 11.48 லட்சம் போ் தோ்வு எழுதினா்.

இந்நிலையில், குரூப் 4 தோ்வுக்கான முடிவுகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியானது.

மேலும், கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கான அழைப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறித்து விவரம் விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாக நான்கு மாதங்கள் ஆன நிலையில், இந்தாண்டு 102 நாள்களில் வெளியிடப்பட்டுள்ளது தேர்வர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Summary

THE MARKS AND RANK POSITION FOR THE POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP - IV SERVICES) EXAMINATION HELD ON 12.07.2025 F.N HAVE BEEN PUBLISHED.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com