

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சத்தின் கீழ் செயல்படும் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள எழுத்தர், சர்வேயர், முதுநிலை கணக்கு அலுவலர் என 14 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள், தகுதிகள் குறித்து பார்ப்போம்.
பணி: Lower Division Clerk (LDC)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
தகுதி: மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27-க்கு இருக்க வேண்டும்.
பணி: Junior Hydrographic Surveyor (JHS)
காலியிடங்கள்: 9
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Accounts Officer
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது செலவுகள் மற்றும் பணி கணக்காளர் பிரிவில் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வணிகக் கணக்குகள் துறையில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.11.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.