

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 110 பொது, சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆய்வு, அதிகார மொழி, பொறியியல் ஆகிய குரூப் ஏ பணியிடங்களான உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.30 முதல் தோராயமாக நவம்பர் 30-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 110
பணி: உதவி மேலாளர்(Assistant Manager)\
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. பொது - 56
2. சட்டம் -20
3. தகவல் தொழில்நுட்பம் - 22
4. ஆய்வு -4
5. மொழி -3
6. பொறியியல் (எலெக்ட்ரிக்கல்) - 2
7. பொறியியல் (சிவில்) - 3
சம்பளம்: மாதம் ரூ. 62,500 - ரூ.1,26,100 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 30.9.2025 தேதியின்படி 30 வயதிற்குல் இருக்க வேண்டும். .1.10.95-க்கு பின்னர் பிறந்தவராக இருக்கக்கூடாது. அரசு விதிகளின்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ, சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம, பொறியியல் பாடப்பிரிவில் எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், சிஏ, பட்டய நிதி ஆய்வாளர், நிறுவன செயலாளர் (சிஎஸ்), செலவு கணக்காளர் ஆகியவற்றில் தகுதிப் பெற்றவர்கள், பொருளாதாரம், வணிகம், தொழில் நிர்வாகம், நிதி, புள்ளியியல், டேட்டா சயின்ஸ், ஏஐ மெஷின் லேனிங், டேட்டா அனலிஸ்ட் ஆகிய பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பொருளாதரம், வணிகம் ஆகியவற்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை வழங்கப்படும் .
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை, இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பணியிடங்களுக்கேற்ப சொந்த மாநிலங்களில் பணி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.100, இதர அனைத்து பிரிவினரும் ரூ. 1000 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: அக். 30-ம் தேதி முதல் நவ.30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.