

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் காலியாக உள்ள 76, விலங்கு நல அலுவலர், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் நவம்பர் 12-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: விலங்கு நல அலுவலர்
காலியிடங்கள்: 38
வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி 35 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கால்நடை அறிவியல் துறையில் இளங்கலை (பி.வி.எஸ்சி) பட்டம் மற்றும் ஏஎச் அல்லது முதுகலை கால்நடைஅறிவியல் (எம்.பி.எஸ்சி) முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: விலங்குகள் பராமரிப்பு , விலங்குகள் பிறப்பு கட்டுபாடு அறுவை சிகிச்சை ஆகியவற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், சட்டம் மற்றும் நெறிமுறைகளை அறிந்தவராக இருக்க வேண்டும். கணினி பயன்படுத்துதல் மற்றும் அறிக்கை தயாரித்தலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்
காலியிடங்கள்: 38
வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கால்நடை அறிவியல் துறையில் இளங்கலை (பி.வி.எஸ்சி) பட்டம் மற்றும் ஏஎச் முடித்திருக்க வேண்டும். அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் முதுகலை பட்டம்(எம்.வி.எஸ்சி) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டு விலங்குகள் பிறப்பு கட்டுபாடு சிகிச்சையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.56,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://tnawb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், எண்.13/1, 3 ஆவது கடல் நோக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை - 600 041.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 14.11.2025
மேலம் கூடுதல் தகவல்களுக்கு 044-24575701 அல்லது tnawb23@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.